ரஷ்யாவில் இருந்து தாய்லாந்து நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதால் பயணிகள் காயமடைந்துள்ளனர்.
விமானம் பாங்காக் நகரை நெருங்கிய போது காற்றில் ஏற்பட்ட வெற்றிடம் காரணமாக விமானம் மேலும் கீழுமாக குலுங்கி பறக்கத் துவங்கியது.
சுமார் 10 நிமிடங்கள் விமானம் குலுங்கியதால் இருக்கைகளில் இருந்த பயணிகளில் பெரும்பாலானோர் கீழே விழுந்தனர். இவர்களில் 3 குழந்தைகள் உள்பட 27 பேருக்கு கை, கால்களில் எலும்பு முறிவும், பலத்த காயங்களும் ஏற்பட்டது.
பின்னர் சிறிது நேரத்தில் விமானம் வழக்கம் போல் சீராக பறந்தது. படுகாயம் அடைந்த பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால், அவர்களுக்கு காயம் அடைய நேரிட்டது என்று விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.