புது வருடத்தில், ஏதேனும் வித்தியாசமான, புதுமையான சம்பவங்கள் இடம்பெறுமா என்று அனைவரும் எதிர்பார்ப்பது வழமையான ஒன்று.
இந்நிலையில், 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே வித்தியாசமான சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடைப்பெற்றுள்ளது. அதுவும் விமான போக்குவரத்து பயண நேரத்தில் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UA890 என்ற போயிங் விமானம் 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி பயணத்தை தொடங்கி, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தரையிறங்கியுள்ளது.
சீனாவிலிருந்து அமெரிக்கா சென்ற விமானமே இவ்வாறு சென்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நேர வித்தியாசமே இந்த வித்தியாசமான பயண நேர நிலைக்கு காரணமாகும்.