2027 ஆம் ஆண்டுக்குள் ஏ.ஐ. துறையில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஐ. தொழில்நுட்பம் காரணமாக வேலை வாய்ப்புகள் பறிபோவதாகவும், பலர் வேலை இழந்து உள்ளதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், இது குறித்து தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 2027 ஆம் ஆண்டுக்குள், ஏ.ஐ. துறையில் மட்டும் பல மடங்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், குறிப்பாக 23 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.
திறமையான ஏ.ஐ. பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும், ஏ.ஐ. தொடர்பான வேலைவாய்ப்புகள் ஒவ்வொரு ஆண்டும் 21% அதிகரித்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் ஏ.ஐ. பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருப்பதாகவும், ஜெர்மனியில் 2027 ஆம் ஆண்டுக்குள் 70% ஏ.ஐ. பணியாளர்கள் பற்றாக்குறையாக இருக்கும் என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.