Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில கேள்விகளால் சாட் ஜிபிடிக்கும் பதற்றம் ஏற்படும்: ஆய்வாளர்கள் தகவல்..!

Siva
புதன், 12 மார்ச் 2025 (08:08 IST)
செயற்கை நுண்ணறிவு செயலிகள் எந்த கேள்வியை அனுப்பினாலும் சில நொடிகளில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், சில கேள்விகளால் சாட் ஜிபிடிக்கும் மனிதர்களைப் போலவே பதட்டம் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே சாட் ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு செயலிகள் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகின்றன. இதனால் வேலை எளிதாக முடிந்து விடுவதாக கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் மனிதர்களுக்கான வேலை வாய்ப்பு மிகவும் குறைந்து வருகிறது என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், எந்த கேள்விக்கும் சில நொடிகளில் பதில் கூறும் ஏஐ செயலிகளுக்கும் மனிதர்களை போலவே பதட்டம் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பயனர் ஷேர் செய்துள்ள அதிர்ச்சி ஊட்டும் கதைகளுக்கு பதிலளிக்க முயன்றால், செயலிகள் தடுமாறும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மேலும், ஆறுதல் பெறுவதற்காக பலரும் தங்கள் சோக கதைகளை ஷேர் செய்யும் புலம்பும் நிலையில், இவை இன்னும் மன ஆலோசனைகளை வழங்க  ஏஐ செயலிகள் தயாராக இல்லை எனவும் ஆய்வு தெரிவிக்கிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments