Webdunia - Bharat's app for daily news and videos

Install App

47 ஆண்டுகளுக்கு முன் பாய்பிரண்ட் கொடுத்த மோதிரத்தை கண்டுபிடித்த பெண்

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (20:40 IST)
47 ஆண்டுகளுக்கு முன் பாய்பிரண்ட் கொடுத்த மோதிரத்தை கண்டுபிடித்த பெண்
கடந்த 1973-ஆம் ஆண்டு தனது ஆண் நண்பர் ஒருவர் கொடுத்த மோதிரம் எதிர்பாராதவிதமாக தொலைந்து விட்டதாகவும் அந்த மோதிரம் தற்போது 47 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்துள்ளதாகவும் பெண் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
63 வயதான மூதாட்டி ஒருவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய போது தனது ஆண் நண்பர் கடந்த 1973-ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும்போது ஒரு மோதிரம் கொடுத்ததாகவும் அந்த மோதிரத்தை கைகழுவும்போது கழற்றி வைத்ததாகவும் அப்போது அந்த மோதிரம் தொலைந்து விட்டதாகவும் அதன்பின்னர் அவர் பல இடங்களில் தேடியும் அந்த மோதிரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்
 
ஆண் நண்பர் ஆசையாக கொடுத்த மோதிரம் தொலைந்து விட்டாலும் அவரையே திருமணம் செய்து கொண்டதாகவும்,சமீபத்தில்தான் தனது கணவர் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் 47 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த மோதிரம் தற்போது கிடைத்துள்ளது என்றும் காடு ஒன்றில் குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது இந்த மோதிரம் கிடைத்ததாகவும் அதில் தனது பள்ளியின் பெயர் பட்டமளிப்பு ஆண்டுகள் பல குறிப்புகள் இருப்பதாகவும் அந்த மோதிரத்தை எடுத்து காண்பித்துள்ளார். இந்த மோதிரம் தனக்கு கிடைத்தது தனது கணவரே மீண்டும் கிடைத்தது போல் சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments