பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டெ கீழ் நடந்து வரும் அரசாங்கம், போதை பொருள் ஒழிப்பில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
மேலும், ரொட்ரிகோ டுடேர்டெ, போதை பொருளுக்கு அடிமையானவர்களை கொலை செய்ய சொல்லி பொதுவெளியில் பொதுமக்களை ஊக்கப்படுத்தினார்.
இந்நிலையில், மரியா அரோரா மொய்னிஹன், 45, என்ற போதை பொருள் விநியோகிப்பாளர் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர், நடிகை, மாடல், மற்றும் தொழிலதிபரான மாரிட்டோனொ பெர்னாண்டஸ் (47) தங்கை. மேலும், இவது தந்தை, லார்ட் மொய்னிஹன், மரணம் அடையும் வரை, விபச்சார விடுதி மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்.
மரியாவின் இறந்த உடல் அருகே ஒரு அட்டையில், ”இவர் பிரபலங்களுக்கு போதை பொருள் விநியோகம் செய்பவர்” என்று எழுதப்பட்டிருந்தது.
இறந்த, மரியா, பிப்ரவரி 2013, சட்டவிரோத போதை பொருள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.