Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்புதான் தீர்வு: வைகோ

தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்புதான் தீர்வு: வைகோ

Advertiesment
தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்புதான் தீர்வு: வைகோ
, சனி, 6 பிப்ரவரி 2016 (00:51 IST)
தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்துவதுதான் இறுதி தீர்வு என வைகோ தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கண்ணீராலும், இரத்தத்தாலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் சோக வரலாறு இன்னும் எத்தனை ஆண்டு காலம் தொடருமோ என உலகத் தமிழினம் பெரும் துயரம் அடைந்துள்ளது.
 
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிர்ப் பலியானார்கள். சிங்கள கொலை வெறிக் கூட்டம் லட்சக் கணக்கான தமிழ் மக்களை கொன்ற போது உலகம் வேடிக்கைப் பார்த்தது.
 
மேலும், ஈழத் தமிழர்களை நிரந்தரக் கொத்தடிமைகளாக ஆக்குவோம் என்று சிங்கள இனவாத அரசு கொக்கரிக்கிறது.
 
இதன் எதிரொலியாக, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, பிப்ரவரி 2 ஆம் தேதி, இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, புதிதாக உருவாக்கப்படும் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில், சமஷ்டி அமைப்பு முறைக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவதுதான் ஒரே தீர்வு என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil