அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட ஒரு ரியாலிட்டி ஷோவில் நடந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உலகமெங்கும் ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமாகி வருகிறது. நம்மூரில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் கூட ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்படுகிறது.
இதில் பல சினிமா மற்றும் சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு சாகசம் செய்வார்கள். பார்வையாளர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்து, டீஆர்பியை ஏற்றுவதுதன் இந்த நிகழ்ச்சிகளின் நோக்கமாகும்.
சமீபத்தில் அமெரிக்காவின் வாசிஷ்டன் நகரில் என்பிசி என்ற தொலைக்காட்சி “அமெரிக்காஸ் காட் டேலண்ட்” என்ற் தலைப்பில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தியது.
அதில் ஒரு மேஜிக் நிபுணர் மற்றும் அவரது பெண் தோழி ஆகியோர் கலந்து கொண்டு சில மேஜிக் மற்றும் சாகசங்களை செய்து காட்டினர். ஒரு கட்டத்தில் அந்த மேஜிக் நிபுணர் வாய்க்குள் கத்தியை விட்ட படி, அதன் அடிப்பகுதியை தீ எரியும் அம்பைக் கொண்டு தாக்குமாறு கூறினார்.
அவரது தோழியும், அம்பை வில்லில் பூட்டி அவரது வாயில் இருந்த கத்தியின் அடிப்பாகத்தை நோக்கி செலுத்தினார். ஆனால், அம்பு குறி தவறி அவரது கழுத்தில் பாய்ந்தது. இதைக் கண்ட நடுவர்களும், பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது.
இதுபோன்ற சாகசங்களை ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆதரிக்கக்கூடாது என்று சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.