டென்மார்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு! 3 பேர் பலி!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (09:51 IST)
டென்மார்க் வணிக வளாகம் ஒன்றில் இளைஞர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகனில் விமான நிலையம் அருகே வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகமான மக்கள் அந்த வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்து வந்துள்ளனர்.

அப்போது வணிக வளாகத்திற்குள் புகுந்த 24 வயது இளைஞர் திடீரென துப்பாக்கியை எடுத்து அங்குள்ளவர்களை சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த இளைஞரை வளைத்து பிடித்து கைது செய்த போலீஸார் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments