இந்தோனேசியாவில் பெண் என நினைத்து ஆண் ஒருவரை இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பலரும் ஆன்லைன் மூலமே பழகி காதலில் விழுவது சகஜமான விஷயமாக மாறி உள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு சிலர் போலியான ஐடிக்களில் பெண் போல வந்து பேசி ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளது. ஆனால் இந்தோனேஷியாவில் ஒரு ஆண் தன்னை பெண்ணாகவே மேக்கப் செய்து கொண்டு சக ஆணை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய சம்பவம்தான் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.
இந்தோனேஷியாவை சேர்ந்த ஏ.கே என்ற நபர் சமூக வலைதளங்களில் உலாவி வந்தபோது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய அந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் தங்கள் காதலை தெரிவித்துக் கொண்ட நிலையில் வீட்டில் பேசி திருமணமும் நடந்துள்ளது. திருமணத்தன்று அந்த பெண் புர்கா அணிந்து இருந்ததால் ஏ.கேவால் பெண்ணின் முகத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த பெண்ணின் குரலிலேயே மயங்கி இருந்துள்ளார்.
திருமணத்திற்கு பின் ஏகே அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க முயன்றபோதும் அதற்கு அந்த பெண் ஏதோ சொல்லி தட்டிக்கழித்துள்ளார். அதன்பின்னர் அந்த பெண்ணின் நடவடிக்கைகளில் ஏகேவுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் அந்த பெண்ணை ஏகே சோதித்தபோது அது பெண்ணே இல்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏகேவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது ஒரு ஆண். ஏகேவின் சொத்துக்களுக்காக பெண் வேடத்தில் வந்து திருமணம் செய்து கொண்டு 12 நாட்களாக குடும்பமும் நடத்தி வந்துள்ளார் அந்த ஆண். இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.