Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் பாம்பு வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (15:41 IST)
சீனாவில் ஒயின் தயாரிப்பதற்காக ஆன்லைனில் பாம்பு வாங்கிய  பெண் ஒருவர் அந்த பாம்பினாலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த ஸியோபேங் என்ற பெண் சீனாவின் பாரம்பரிய மருந்துகளில் ஒன்றான பாம்பு ஒயினை தயாரிக்க திட்டமிட்டார். பாம்பு ஒயினை தயாரிக்க பாம்புகளை ஆல்கஹாலில் மூழ்க வைக்க வேண்டும்.
 
ஆகவே பாம்பு ஒயினை தயாரிப்பதற்காக அந்த பெண், ஆன்லைனில் பாம்பை ஆர்டர் செய்து வரவழைத்தார். பின் அந்த பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்க ஆரம்பித்தார். சமீபத்தில் பெண்ணின் விரலை அந்த பாம்பு கடித்துள்ளது. உடனடியாக ஸியோபேங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருந்தபோதிலும் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் அந்த பாம்பின் விஷக்கடிக்கான சரியான மருந்து கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி ஸியோபேங் பரிதாபமாக உயிரிழந்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பம் பதிவாகலாம்.. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்..!

காஸா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்.. 22 குழந்தைகள் உள்பட 70 பேர் பலி!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன்.. ரூ.8,700 கோடி விடுவித்த சா்வதேச நிதியம்

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. லாபத்தை அதிகளவில் புக் செய்கிறார்களா?

இன்று ஒரே நாளில் 1500 ரூபாய்க்கு மேல் குறைந்த தங்கம்.. நகைப்பிரியர்கள் குஷி..!

அடுத்த கட்டுரையில்
Show comments