தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சீனாவில் சில நாட்களுக்கு முன் நில நடுக்கம் வந்து உயிரிழப்புகளையும் சேதத்தையும் ஏற்படுத்திய நிலைய்உய்ல் இன்று தைவான் நாட்டில் கிழக்கு கடற்கரைப்பகுதியில் இரவு 9:30 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கம் கடலோர நகரான டைட்டாங்கிற்கு சற்றுத் தொலையில் உள்ள பகுதியில் தோன்றியதாகவும், இது 6.6. அலகாகப் பதிவாகியுள்ளது. கட்டிடங்கள் வீடுகள் அதிர்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வீதிகளில் குவிந்தனர்.
தைவான் நாட்டில் நி ல நடுக்க அலகு 7.0 ஆக இருந்தால் மட்டுமே சுனாமி எச்சரிக்கை விடப்படும் நிலையில் இன்று வந்த6.0 மற்றும் அதற்கு மேல் 6.6 அலகு நில நடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.