காற்று வாங்க விமானத்தின் அவசர கால கதவை திறந்த பயணி கைது
, புதன், 2 மே 2018 (07:50 IST)
சீனாவில் விமான பயணி ஒருவர் புழுக்கம் காரணமாக அவசர கால கதவை திறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் சென் (25) என்ற நபர் விமானம் மூலம் வெளியூர் செல்ல திட்டமிட்டு சீனாவின் சென்ஜென் விமான நிலையத்திற்கு சென்று, விமானத்தில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். விமானம் புறப்படும் நேரத்தில், சென் விமானத்தின் அவசர கால கதவுகளை திறந்து இருக்கிறார். இதனால் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம் ஆனது.
இதையடுத்து சென் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விமானத்தில் புழுக்கம் அதிகமாக இருந்ததாகவும், அதனால் ஜன்னலை திறப்பதாக நினைத்துக் கொண்டு அவசர கால கதவுகளை தவறுதலாக திறந்ததாக அவர் கூறியுள்ளார். சென் கூறினார். பயணிகளுக்கு இடைஞ்சலாக இருந்ததால் வருக்கு 15 நாள் சிறை தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்