Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 மனைவிகள், 13 குழந்தைகள்: புரடா விட்ட கப்சா மன்னன்: அலறிப்போன 7வது மனைவி

Advertiesment
நபர்
, திங்கள், 17 டிசம்பர் 2018 (16:24 IST)
பிரித்தானியாவில் பெண் ஒருவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழியால் ஏமாந்ததை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
 
பிரித்தானியாவில் மேரி தாம்சன் என்ற பெண்ணிற்கு இணையதளம் மூலம் வில்லியம்ஸ் எனற நபருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
 
இருவரும் நட்புடன் பழகி வந்த நிலையில் வில்லியம்ஸ் தாம்சனிடம் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்டிருக்கிறான். முதலில் இதனை மறுத்த தாம்சன் பின்னர் ஒப்புக்கொண்டார்.
 
இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் தாம்சன் கர்ப்பமுற்று குழந்தையும் பெற்றெடுத்திருக்கிறார். பிறகுதான் தாம்சனுக்கு வில்லியம்சின் உண்மை முகம் தெரிந்தது.
 
வில்லியம்ஸ் ஒரு ஏமாற்று பேர்வழி என்றும் அவனுக்கு ஏற்கனவே 6 மனைவிகள், 13 குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் வில்லியம்ஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரையை கடந்தது பெய்ட்டி புயல்: தப்பித்தது தமிழகம்