Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிட் குளத்தில் குளித்து கரைந்த நபர்

ஆசிட் குளத்தில் குளித்து கரைந்த நபர்
, வெள்ளி, 18 நவம்பர் 2016 (14:58 IST)
அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில், காலின் ஸ்காட் என்ற நபர் அமிலத்தன்மை நிறைந்த குளத்தில் தவறி விழுந்தது கரைந்து போனார்.


 

 
அமெரிக்காவில் சேர்ந்த காலின் ஸ்காட் என்பவர் தனது சகோதரியுடன் தேசிய இயற்கை பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்குள்ள அமிலத்தன்மை மிக்க வெப்பக் குளத்தின் வெப்ப நிலையை சோதிக்க சற்று குனிந்து முயற்சித்துள்ளார்.
 
அதில் அவர் தவறி விழுந்தார். அந்த நபரின் உடலை மீட்புகுழுவினர் மீட்கும் முன்னர் அவரது உடல் அமிலத்தன்மை உடைய குளத்தில் கரைந்து விட்டது. மேலும் காலின் ஸ்காட் குளத்தில் விழும் சம்பவத்தை அவரது சகோதரி கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளார்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து பூங்காவில் பலத்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாட்ஸ் ஆப் வீடியோ கால்: செயல்படாததற்கான காரணங்கள்!!