Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிங்கத்தை கொன்று முத்தம் கொடுத்து கொண்ட இளம்ஜோடி..ஃபேஸ்புக்கில் வலுக்கும் எதிர்ப்பு

சிங்கத்தை கொன்று முத்தம் கொடுத்து கொண்ட இளம்ஜோடி..ஃபேஸ்புக்கில் வலுக்கும் எதிர்ப்பு
, புதன், 17 ஜூலை 2019 (11:52 IST)
சிங்கத்தை வேட்டையாடிய இளம்ஜோடி, முத்தம் கொடுத்துகொண்ட புகைப்படத்திற்கு சமூக வலைத்தலத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தென்னாப்ரிக்காவில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக “சபாரி” எனப்படும் காட்டில் சுற்றுலா மற்றும் மிருகங்களை வேட்டையாடுதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த இளம்ஜோடியான டேரன் – கார்லோன் கார்ட்டர் ஆகியோர், வேட்டையாடும் போட்டி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த வேட்டையாடும் போட்டியில் சிங்கம் ஒன்றை வேட்டையாடி கொன்று, அந்த சிங்கத்தின் உடலின் அருகிலேயே அமர்ந்து இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர்.

இதனை புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தலங்களில், லெகிலா என்னும் சுற்றுலா நிறுவனம் பதிவேற்றியது. தற்போது இந்த புகைப்படத்தை எதிர்த்து உலகம் முழுவதும் பல கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் #StopLionHunting என்ற ஹேஷ்டேக்குடன் டிவிட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மயானத்தில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட 4 வயது சிறுவன்: சித்தப்பனின் வெறிச்செயல்