Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் அவலங்கள் - லண்டனில் இந்தியர்களை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (07:42 IST)
லண்டனில் இந்திய குடும்பத்தினரை உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான கொலை வெறித்தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அன்றாடம் இந்தியர்கள் வெளிநாட்டில் தாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை கேட்கிறோம். இங்கிருந்து அங்கு படிக்க சென்ற மாணவர்கள், பிழைப்பு தேடி செல்வோர் மீது சில இன வெறியர்கள் கொலை வெறித் தாக்குதல்களை தொடுப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.
 
இந்தியாவை சேர்ந்த மயூர் கார்லேகர் என்பவர் லண்டனில் ஆர்பிங்டன் பார்க் உட்பார்க் பகுதியில் டிஜிட்டல் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டிற்கு யாரோ சில மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். குடுமபத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்த மயூருக்கு இது தெரியவில்லை. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து மயூர் கார்லேகரிடம் தெரிவித்தனர். பதறியடித்துக் கொண்டு எழுந்த மயூர் உடனடியாக குடுமத்தினருடன் வீட்டிலிருந்து வெளியேறினார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். போலீஸார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 1,717 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் நீடிப்பு இல்லையா? மாணவர்கள் அதிர்ச்சி..!

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: ரிசர்வ் வங்கி

அரசு பள்ளிகளை மூடிய உங்களுக்கு விரைவில் மூடுவிழா! ரெடியா இருங்க! - அன்புமணி ராமதாஸ்!

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments