கடந்த சில வருடங்களாக உலகெங்கும் துப்பாக்கி கலாச்சாரம், வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகி வருவதாக சமூக நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நாட்டில் வெடிகுண்டு வெடித்து அல்லது துப்பாக்கி சூடு காரணமாக அப்பாவி பொதுமக்கள் பலர் தங்களுடைய விலைமதிப்பில்லா உயிர்களை இழந்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று நியூசிலாந்து நாட்டில் உள்ள 2 மசூதிகளில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச்சில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் அறிந்தவுடன் அந்நாட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சூடு குறித்து கடும் கண்டனம் தெரிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன், நியூசிலாந்துக்கு இன்று ஒரு கருப்பு தினம் என்று தெரிவித்துள்ளார்.