Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்மணியை துப்பாக்கியால் சுட்ட நாய்!!

Advertiesment
பெண்மணியை துப்பாக்கியால் சுட்ட நாய்!!

Arun Prasath

, வெள்ளி, 11 அக்டோபர் 2019 (13:19 IST)
அமெரிக்காவில் ஒரு பெண்மணியை, ஒரு நாய் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா மாகாணத்தில், டீனா ஸ்ப்ரிங்கர் என்னும் 44 வயது பெண்மணி வசித்து வருகிறார். இந்நிலையில், தனது 79 வயது நண்பர் பிரெண்ட் பார்க்ஸுடன் காரில் சென்றுள்ளார். அப்போது பிரண்ட் பார்க்ஸ், தனது மஞ்சள் நிற லாப்ரடார் நாயையும் அழைத்து சென்றுள்ளார். அந்த நாயின் செல்ல பெயர் மோலி. மேலும் அவர் தனது பாதுகாப்பிற்காக, 22 கேலிபர் துப்பாக்கியையும் கொண்டு சென்றார்.

முன் இறுக்கையில் டீனா கார் ஓட்ட, மற்றொரு இருக்கையில் பிரெண்ட் பார்க்ஸ் அமர்ந்துள்ளார். அப்போது தனது குண்டுகள் நிறைந்த துப்பாக்கியை இரு இருக்கைகளுக்கும் இடையே வைத்துள்ளார். மேலும் மோலி கார் பின் சீட்டில் தூங்கி கொண்டிருந்தது.

காரில் சென்றுகொண்டிருக்கும்போது, நடுவில் ரயில்வே கேட் ஒன்றில் ரயில் செல்வதற்காக காரை நிறுத்தியுள்ளனர். அப்போது ரயில் வேகமாக கடந்து சென்றதால், அந்த சத்தத்தை கேட்டு அதிர்ந்து போன மோலி துள்ளி குதித்தது. பதற்றத்தில் துள்ளி குதித்ததில், எதிர்பாராத விதமாக நாய் முன் இருக்கையில் இருந்த துப்பாக்கியின் மேல் விழுந்தது.

இதனால் துப்பாக்கியின் டிரிக்கர் அழுத்தப்பட்டு டீனாவின் தொடையில் குண்டு பாய்ந்தது. குண்டு பாய்ந்ததில் காயமடைந்த டீனாவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குண்டு அகற்றப்பட்டது.

இது குறித்து போலீஸ் அதிகாரி, ராபர்ட். “தனது வாழ்நாளிலேயே ஒரு நாய் ஒரு நபரை சுட்டதாக இப்பொழுது தான் முதல் முதலாக கேள்வி படுகிறேன், பாதுகாப்பிற்காக வாங்கப்படும் துப்பாக்கியை எவ்வாறு கையாள வேண்டும் என மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிருஷ்ணசாமியுடன் டீலிங்: ப்ரைன் வாஷ் செய்ய அதிமுக ப்ளான்!