Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரும்பு பாலத்தை திருடிய பலே கும்பல் - மூளையைக் கசக்கும் போலீஸார்!

இரும்பு பாலத்தை திருடிய பலே  கும்பல் - மூளையைக் கசக்கும் போலீஸார்!
, ஞாயிறு, 9 ஜூன் 2019 (16:54 IST)
ரஷியாவில் ஒரு பிரசித்தி பெற்ற பாலத்தையே ஒரு கும்பல திருடிச் சென்றுள்ள சம்பவம் அந்நாட்டி ல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷியாவில் உள்ள முர்மன்ஸ்க் பகுதியில் உம்பா நதியில் மேல் ஒரு ரயில்வே பாலம் அமைந்திருந்தது. இந்த பாலம், 56 டன் எடையும், 75 அடி நீளமும் கொண்டது ஆகும்.ஆனால் கடந்த 2007 ஆம் ஆண்டுமுதல் இப்பாலம் பயன்படுத்தப்படாமலேயே இருந்தது. அடர்ந்த வனப்பகுதியில் இப்பாலம் அமைந்துள்ளதாஅல் மக்கள் நடமாட்டம் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது.
 
இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இப்பாலம் காணாமல் போனதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து அந்தப் பாலத்திம் புகைப்படம் வெளியானது. அதில் அந்த[ப் பாலம் இருந்ததற்காக சுவடுகளே தெரியவில்லை.
 
மேலும் இப்பாலம் உடைந்து விழுந்திருந்தால் அதனுடைய இடிபாடுகள் இருக்கவேண்டும். ஆனால் அதில்லாமல்  மொத்த பாலமும் காணாதது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அங்குள்ள உலோகத்திருடர்களால் இப்பாலம் திருடப்பட்டிருக்கலாம் என்ற உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
 
இதை யார் திருடினார்கள் என்பது தெரியாமல் போலீஸார் மண்டையை பிய்த்துவருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஜாக்கி வைத்து உயர்த்தப்பட்ட வீடு’ இடிந்து விழுந்து விபத்து ! பலர் காயம்