உலக நாடுகளில் போர்கள் நடப்பவை தடுப்பதற்கு இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் ஆலோசனை குழு அமைக்கலாம் என மெக்சிகோ அதிபர் யோசனை தெரிவித்துள்ளார்
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில மாதங்களாக போர் செய்து வருகிறது. அதே போல் தைவானை சுற்றி நாலாபுறமும் சோதனை நடத்தி வரும் சீனா எப்போது வேண்டுமானாலும் போரை தொடங்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் அடுத்த 5 வருடங்களுக்கு உலகில் எந்த நாட்டிலும் போர் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் உலக தலைவர்களை கொண்ட ஆணையத்தை உருவாக்கலாம் என மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவம் என்பவர் தெரிவித்துள்ளார்.
போர் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் இதனை அடுத்து சர்வதேச தலைவர்களை கொண்ட ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அந்த ஆணையம் இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்