Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடியோ கேம் விபரீதம் - தாயை கொலை செய்ய முயற்சித்த சிறுவன்

Advertiesment
வீடியோ கேம் விபரீதம் - தாயை கொலை செய்ய முயற்சித்த சிறுவன்
, புதன், 5 செப்டம்பர் 2018 (08:00 IST)
ஆஸ்திரேலியாவில் 14 வயது சிறுவன் ஒருவன் தன்னை வீடியோகேம் விளையாடக்கூடாது என தடுத்த தாயை கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய கால சிறுவர்கள் செல்போனிற்கு அடிமையாகிவிட்டனர் என்றே சொல்லலாம். எந்நேரமும் வீடியோ கேம், யூட்யூப் வீடியோஸ் என எந்நேரமும் போனும் கையுடனுமே தான் இருக்கின்றனர்.
 
அப்படி ஆஸ்திரேலியாவை சேர்ந்த லோகன் (14) என்ற சிறுவன் எந்நேரமும் வீடியோ கேம்ஸ் விளையாடி வந்துள்ளான். சாப்பிடும் நேரத்தைத் தவிர வீடியோ கேமிலே மூழ்குயுள்ளான் சிறுவன்.
 
இதனால் கடுப்பான அவனது தாய் சிறுவனை வீடியோ கேம் விளையாடுவதை தடுத்ததுள்ளார். ஆத்திரமடைந்த சிறுவன் லோகன், தாய் என்றும் பாராமல் அவரை தலையில் பலமாக தாக்கியுள்ளான்.
 
உடனடியாக சிறுவனின் தாய் போலீஸுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் அந்த சிறுவனிடமிருந்து தாயை மீட்டனர்.
 
இதனையடுத்து சிறுவனின் தாயார் அவனை கவுன்ஸ்லிங் கூட்டிச் செல்ல முடிவு செய்துள்ளார். சிறுவர்களின் இந்த வீடியோ கேம் அடிக்‌ஷனுக்கு பெற்றோர்கள் தான் முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணத்திற்காக பெண்ணை கடத்த தயார்: பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு