Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குட்டி பையனோடு வலம் வரும் முள்ளம்பன்றி! – போக்கிமான் என ட்விட்டரில் ட்ரெண்ட்!

Advertiesment
World
, திங்கள், 20 ஜனவரி 2020 (18:44 IST)
குட்டி பையன் ஒருவனும் முள்ளம்பன்றியும் சாலையில் சாவகாசமாக விளையாடி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல்வேறு வகைகளில் விலங்குகள் மனிதர்களுக்கு அந்நியமாய் தெரிந்தாலும் பல விலங்குகள் மனிதர்களோடு பழகுவதில், அன்பு செலுத்துவதில் சில சமயம் நம்மையே ஆச்சர்யப்பட வைத்து விடுகின்றன. அந்த வகையில் தற்போது முள்ளம்பன்றியும் ஒரு சிறுவனும் சாலையில் நடந்து செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.

பொதுவாகவே முள்ளம்பன்றிகள் பயந்த சுபாவம் உடையவை. தங்கள் அருகில் மனிதனோ, மிருகமோ எதிர்பட்டால் உடனே தனது உடலை முள்ளால் மறைத்துக் கொள்பவை. சிறுவன் ஒருவன் சாலை ஒன்றில் சென்று கொண்டிருக்க அவனை பின் தொடர்ந்தபடியே முள்ளம்பன்றி ஒன்று வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பலர் கார்ட்டூன் தொடரான போக்கிமானில் வரும் குட்டி விலங்கு போல அது இருப்பதாக கூறியுள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவை எதிர்க்கும் அளவுக்கு நாங்க பெரிய ஆள் இல்லை! – பல்டி அடித்த மலேசிய பிரதமர்!