Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லண்டனை விட 2 மடங்கு பெரிய பனிப்பாறை.. அண்டார்டிகாவில் இருந்து நகர்ந்து வருவதால் பரபரப்பு..!

Advertiesment
லண்டனை விட 2 மடங்கு பெரிய பனிப்பாறை.. அண்டார்டிகாவில் இருந்து நகர்ந்து வருவதால் பரபரப்பு..!
, சனி, 25 நவம்பர் 2023 (11:40 IST)
லண்டன் நகரை விட இரண்டு மடங்கு பரப்பளவு கொண்ட பனிப்பாறை அண்டார்டிகா கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து வந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் மட்டத்தின் அளவு உயர்ந்து வருவதாகவும் இதனால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில்  கடலோரத்தில் உள்ள பல நகரங்கள் மூழ்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி லண்டன் மாநகரத்தை விட இரண்டு மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகா கண்டத்தை விட்டு பிரிந்திருப்பதாகவும் இந்த பெரிய பனிப்பாறை ஜார்ஜியா தீவை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

 இந்த பனிப்பாறை நகர்ந்து வருவதால் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் இந்த பனிப்பாறை ஜார்ஜியா தீவில் மோதினால் அந்த தீவில் உள்ள பொது மக்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ரூ46,000-ஐ தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை! பொதுமக்கள் அதிர்ச்சி..!