Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலரா பரவல் புரளியால் 96 பேர் பலி! என்ன நடந்தது?

Mozambique,

Sinoj

, திங்கள், 8 ஏப்ரல் 2024 (17:33 IST)
உலகில் வறுமையில் வாரும் நாடுகளில் ஒன்று மொசாம்பிக்   எரிவாயு வளம் அதிகம் கொண்ட நாடாக உள்ளது. இருந்தபோதிலும் இங்கு, 3-ல் 2 பங்கு மக்கள் வறுமையில் வாழ்கின்றனர்.
 
அதில் இருந்து மீள முயன்று கொண்டிருந்த மக்களுக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஊடுருவி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். 
 
அவர்களுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், இரு தரப்பிற்கும் ஏற்பட்ட மோதலில் இதுவரை 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 10 லட்சம் பேர் தம் சொந்த நாட்டை விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில்,   அந்த நாட்டில் காலரா பரவுவதாக தவறான தகவல் வெளியான  நிலையில்,  மக்கள் சிலர்  பயந்துகொண்டு அங்கிருந்து செல்ல முடிவெடித்தனர்.
 
அதன்படி, வடகடலோர பகுதியில் 130 பேரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று நம்புலா  மாகாணத்தில் இருக்கும் தீவு நோக்கி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அப்படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதீல், குழந்தைகள் உள்பட 96 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.
 
காலார பரவுவதக வதந்தி பரவிய நிலையில், படகில் போதிய வசதி இல்லாததாலும், கூட்ட நெரிசலாலும், இவ்விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதில் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள  நிலையில், மீட்புப் பணி  நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளழகர் திருவிழா காரணமாக தேர்வுகள் ஒத்திவைப்பு! முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!