Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக கொரோனா பாதிப்பு 95.20 லட்சமாக உயர்வு: மிக அதிக உயிரிழப்பில் பிரேசில்

உலக கொரோனா பாதிப்பு 95.20 லட்சமாக உயர்வு: மிக அதிக உயிரிழப்பில் பிரேசில்
, வியாழன், 25 ஜூன் 2020 (06:42 IST)
உலக கொரோனா பாதிப்பு 95.20 லட்சமாக உயர்வு
உலகில் 95,20,134 பேர்  கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உலகில் 4,83,958 பேர்  கொரோனா தொற்றால் இதுவரை மரணம் அடைந்திருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் உலகில் கொரோனாவில் இருந்து 51,69,213 பேர் குணம் அடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
உலகிலேயே கொரோனா தொற்றால் அமெரிக்காவில் தான் மிக அதிகமாக 124,280 பலி பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 24,63,206 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
அமெரிக்காவை பிரேசிலில் 11,92,474 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்நாட்டில் மொத்தம் 53,874 பேர் உயிரிழந்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. உலகிலேயே நேற்று ஒரே நாளில் மிக அதிகபட்சமாக பிரேசிலில் 1,103 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ரஷ்யாவில் 6,06,881 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் 4,72,985 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 424 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,907 ஆக உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா ஊரடங்கு: ‘’ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்கிறோம், ஆனால், சாப்பாட்டுக்கு வழியில்லை’’