Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருந்து தப்பி ஓடிய 900 கைதிகள்: காங்கோவில் களோபரம்!!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (11:06 IST)
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் உள்ள சிறயில் இருந்து 900 கைதிகள் தப்பி சென்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
காங்கோவில் ஆளும் அரசுக்கும், தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டின் பெனி சிறை மீது தீவிரவாதக் குழுக்கள் திடீர் தாக்குதல் நடத்தின. 
 
இந்த தீவிரவாத தாக்குதலில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 900-க்கும் அதிகமான கைதிகள் சிறையில் இருந்து தப்பித்துள்ளதாக  தெரிவந்துள்ளது. 
 
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தப்பியோடிய கைதிகளை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
எனவே, அந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தப்பியோடிய கைதிகளை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments