Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெடிக்ளைம் பாலிசி பற்றி தெரியுமா?

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (10:31 IST)
மெடிக்ளைம் பாலிசி என்று அழைக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒருவரது மருத்துவ செலவுகளுக்கான கட்டணங்களை வழங்கும் திட்டமாகும்.


 


காப்பீட்டுதாரர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ, விபத்துகள் நேர்ந்தாலோ அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் இந்த மெடிக்ளைம் பாலிசி என்னும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உதவுகிறது.

நன்மைகள்:

மெடிக்ளைம் பாலிசி தனிப்பட்ட மனிதருக்கும் அல்லது ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் சேர்த்தும் வாங்கலாம்.

தனிநபர் திட்டத்தில், ஒவ்வொரு தனி நபரும் குறிப்பிட்ட காப்பீட்டுத் தொகைக்குத் தனியாகக் காப்பீடு செய்யப்படுகிறார்,

குடும்ப திட்டத்தில் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் சேர்த்து ஒரு குறிப்பிட்ட தொகை காப்பீடு செய்யப் பெறுகின்றனர்.

இரண்டு வகை மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:

# பணமில்லா காப்பீட்டுத் திட்டம்

# காப்பீட்டு நிறுவன இணைப்பு திட்டம்

பணமில்லா காப்பீட்டுத் திட்டம்:

பணமில்லா காப்பீட்டுத் திட்டம் என்பது ஒரு நோயாளியை மருத்துவமனைக்கு எந்த விதமான முன் கட்டணத்தையும் செலுத்தாமல் சிகிச்சை பெற அனுமதிக்கும் ஒரு திட்டமாகும்.

காப்பீட்டு நிறுவன இணைப்பு திட்டம்:

இந்த வகைத் திட்டத்தில், நோயாளி காப்பீட்டு நிறுவனத்தின் இணைப்பிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கு ஆன குறிப்பிட்ட கட்டணத் தொகையைப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மருத்துவமனைக்குச் செலுத்தி விடுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments