Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 கொலைகள்! ஜப்பானை உலுக்கிய சைக்கோ கில்லர்! - மரண தண்டனை நிறைவேற்றம்!

Prasanth K
ஞாயிறு, 29 ஜூன் 2025 (10:03 IST)

ஜப்பானை உலுக்கிய சைக்கோ கில்லராம ட்விட்டர் கில்லருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

உலகம் முழுவதும் பல நாடுகளில் சில சமயங்களில் சைக்கோ கில்லர்களின் நடமாட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. அப்படியாக சமீப பத்தாண்டுகளில் ஜப்பானை உலுக்கிய சைக்கோ கில்லர்தான் இந்த ட்விட்டர் கில்லர் என்ற நபர்.

 

இவனது உண்மையான பெயர் டக்காஷிரோ ஷிராஷி. ஜப்பானில் உள்ள கனகாவாவில் பிறந்து வளர்ந்த டக்காஷிரோ, ட்விட்டர் உள்ளிட்ட சோஷியம் மீடியாக்களில் தற்கொலை எண்ணம், வாழ்க்கை குறித்த விரக்தியுடன் உள்ளவர்களை தொடர்பு கொண்டு இலவச ஆலோசனை வழங்குவது போல நடித்துள்ளார்.

 

அவர்களுடன் நம்பிக்கையான விவாதத்தை ஏற்படுத்திய பின்னர், அவர்களை நேரில் சந்திக்க வர சொல்லி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். இவர் மொத்தம் 8 பெண்கள் 1 ஆண் உள்ளிட்ட 9 பேரை கொலை செய்துள்ள நிலையில் போலீஸில் சிக்கிய இவருக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.

 

அதன்படி நேற்று முன் தினம் (ஜூன் 27) அன்று டக்காஷிரோவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் ஜப்பானில் நிறைவேற்றப்படும் முதல் தூக்குத் தண்டனை இதுவாகும். முன்னதாக டோக்கியோவின் அகிஹபராவில் மக்களை கண்டபடி கத்தியால் குத்தி கொன்ற ஒரு நபருக்கு 2022ம் ஆண்டில் தூக்கு வழங்கப்பட்டது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்