7360 கிலோ எடையில் சமைக்கப்பட்ட புலாவ் உணவு உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் தேசிய உணவான புலாவை பிரம்மாண்ட முறையில் தயாரிக்க சமையல் கலைஞர்கள் முடிவு செய்தனர். அதன்படி, 7360 கிலோ எடையில் புலாவ் உணவை தயார் செய்தனர். 2000 கிலோ இறைச்சி, 3000 கிலோ காய்கறிகள் சேர்க்கப்பட்டு புலாவ் சமைக்கப்ப்பட்டது. இதனை 50 சமையல் கலைஞர்கள் 6 மணி நேரம் சமைத்தனர்.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் புலாவ் உணவுக்கு சிறந்த கலாச்சார உணவு என்ற பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 7360 கிலோ எடையில் சமைக்கப்பட்ட புலாவ் உணவு கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. மேலும் இதற்கு முன் 360 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட புலாவ் உணவுதான் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. தற்போது அந்த கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டது. தற்போது புலவ் உணவு செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.