அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 7 வயது சிறுமி துப்பாக்கி மூலம் முதல்முறையாக மானை வேட்டையாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பகுதியை சேர்ந்த காடி கிலாப்பர் என்பவர், தனது 7 வயது மகளுக்கு ஸ்னைப்பர் என்று சொல்லக்கூடிய துப்பாக்கியை பயன்படுத்த பயிற்சி அளித்துள்ளார்.
அதோடு அந்த 7 வயது சிறுமி அவரது முதல் வேட்டையை, தந்தை வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த சிறுமி நேர்ந்த துப்பாக்கி சூடுதல் கலைஞர் போல் குறிப்பார்ப்பது ரசிக்கும் வகையில் உள்ளது.