Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டு வாரத்தில் 7 லட்சம் பேர் வேலை இழப்பு – அமெரிக்காவில் ருத்ர தாண்டவம் ஆடும் கொரோனா!

இரண்டு வாரத்தில் 7 லட்சம் பேர் வேலை இழப்பு – அமெரிக்காவில் ருத்ர தாண்டவம் ஆடும் கொரோனா!
, திங்கள், 6 ஏப்ரல் 2020 (16:27 IST)
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடந்த 2 வாரங்களில் 7 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தற்போதைய நிலவரத்தில் உலகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது  அமெரிக்காதான். அங்கு கிட்டதட்ட 2.77 லட்சம் பேரை வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7,406 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கைப் பலமடங்கு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 14 நாட்களில் மட்டும் அமெரிக்காவில் மட்டும் 7 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மே இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 8 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த 20 நாட்களில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோர் சதவீதம் 3.5 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த மாதத் தொடக்கத்தில் சுமார் ஒரு கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 12.82 லட்சம் பேர் பாதிப்பு ; 2.69 லட்சம் பேர் மீட்பு