Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

ஒரே நாளில் 7 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்: ஐரோப்பிய நாடுகள் கண்டனம்

Advertiesment
hanged
, வியாழன், 17 நவம்பர் 2022 (08:06 IST)
குவைத் நாட்டில் ஒரே நாளில் 7 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 
 
குவைத் நாட்டில் ஒரே நாளில் 7 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
 
பல்வேறு குற்றங்களுக்காக இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட 7 பேரில் இரண்டு பெண்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
குவைத் நாட்டு ஆண்கள் 3 பேர், குவைத் பெண் ஒருவர், சிரியா, பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் மற்றும் ஒரு எத்தியோப்பிய பெண் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது
 
மிகவும் புனிதமான உயிர்வாழும் உரிமையை இந்த ஏழு பேர் பறித்ததாகவும் அதனால் அவர்களுக்கு இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் குவைத் நீதி துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
ஒரே நாளில் ஏழு பேர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்கு ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் வேகமாக பரவு மெட்ராஸ்-ஐ: மருத்துவர்கள் எச்சரிக்கை