Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை குண்டுவெடிப்பு: ஒரே குழுவைச் சேர்ந்த 7 பேர் கைது

Webdunia
ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (18:30 IST)
இலங்கையில் இன்று காலை முதல் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதேபோல் 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட 8 குண்டு வெடிப்புகள் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் 8 வெடிகுண்டு தாக்குதல்களையும் நடத்தியது ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், குண்டுவெடிப்பில் பெரும்பாலானவை தற்கொலைப்படை தாக்குதல் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் இலங்கையில் 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் குண்டுவெடிப்பில் 450 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்கள் அனனவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments