Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

69 ஆண்டுகள் கழித்து வட கொரியாவில் கால் வைத்த அமெரிக்க அதிபர்

Advertiesment
69 ஆண்டுகள் கழித்து வட கொரியாவில் கால் வைத்த அமெரிக்க அதிபர்
, ஞாயிறு, 30 ஜூன் 2019 (16:18 IST)
வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பல நாட்களாக பிரச்சினைகள் நடந்துவரும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வட கொரிய எல்லையில் நின்று அதிபர் கிம் ஜாங் வுன்னை சந்தித்துள்ளார்.

வட கொரியாவின் தாந்தோன்றித்தனமான செய்கையாலும், அணு ஆயுத பரிசோதனைகளாலும் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே வாக்குவாதம் கடுமையாக நடந்து வந்தது. பிறகு சிங்கப்பூரில் அமைதி பேச்சுவார்த்தைக்காக சந்தித்த கிம், ட்ரம்ப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ட்ரம்ப் பாதியிலேயே எழுந்து போனார்.

இதில் கடுப்பான கிம் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த அவரது ஆலோசகரை பிரானா மீன்களுக்கு இரையாக போட்டுவிட்டதாக கொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் நேற்று நடந்து முடிந்த ஜி20 மாநாட்டில் கிம் ஜாங் வுன்னும், ட்ரம்பும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருவருக்குமிடையே உள்ள கருத்து வேறுபாடு விலகியது.

இதனால் தென் கொரிய, வட கொரிய எல்லையில் வந்து அதிபர் கிம் ஜாங் வுன்னை சந்தித்தார் ட்ரம்ப். அவரை வரவேற்று பேசினார் கிம் ஜாங். அப்போது வடகொரியாவின் பகுதிக்குள் சிறிது தூரம் நடந்து சென்றார் ட்ரம்ப். 69 வருடங்களுக்கு பிறகு கொரிய மண்ணில் காலடி வைத்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.

1950 – 1953 ல் நடந்த கொரிய போரில் அமெரிக்காவின் தலையீடு அதிகமாக இருந்தது. அதன் விளைவாகவே அமெரிக்காவுக்கு ஆதரவான தென் கொரியாவும், விரோதியுமான வட கொரியா என கொரியா இரண்டாக பிரிந்தது. கொரிய பிளவுக்கு பிறகு ஒரு அமெரிக்க அதிபரும் கொரியாவுக்குள் காலடி வைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலர் பதவியேற்பு