Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக கொரோனா நிலவரம்: அமெரிக்காவில் தினசரி பாதிப்பு சுமார் 2 லட்சம்!

உலக கொரோனா நிலவரம்: அமெரிக்காவில் தினசரி பாதிப்பு சுமார் 2 லட்சம்!
, வியாழன், 3 டிசம்பர் 2020 (07:20 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 6.48 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 64,821,023 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,498,316 
பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 44,924,359
பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 18,398,348
ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,313,876 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 279,863 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 8,462,336 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 1,88,853 பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் மட்டும் 2,727 பேர் கொரோனாவால் மரணம் அடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,533,471 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 138,657 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 8,970,104 என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,436,650 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 174,531 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,698,353 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை’’தமிழக அரசை பாராட்டிய பிரதமர் மோடி