Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 6.2 ஆக பதிவு

Advertiesment
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 6.2 ஆக பதிவு
, புதன், 28 டிசம்பர் 2016 (20:43 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ரிகடர் அளவு 6.2 ஆக பதிவானது. 


 

 
ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டைகோ என்னும் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை. 
 
நிலநடுக்கம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தை சுற்றி 3 லட்சம் வசிப்பிடங்கள் இருக்கின்றன. ஆனால் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.  
 
2011 ஆம் ஆண்டு 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பாதித்து சுமார் 20,000 மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 22ஆம் தேதி 6.9 ரிக்டர் அளவில் ஒன்சூ கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண்ணுடன் உல்லாசம் : வீடியோ எடுத்து திருமணத்தை நிறுத்திய தொழில் அதிபர் கைது