சீனாவில் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற குடுமபக் கட்டுப்பாட்டு கொள்கையை அந்நாட்டு அரசு அகற்றியது. இந்நிலையில் அந்நாட்டில் 18 மாதங்களில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன நாடு தான் உலக அளாவில் மக்கள் தொகையில் முதலிடம் வகித்துவருகிறது. அந்நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த 1979 ஆம் ஆண்டு ஒரே குழந்தை என்ற குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையை சீன அரசு கொண்டுவந்தது.
இதனால் சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இளையோர் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் இதே நிலை தொடர்ந்தால் சீனாவில் மனிதவளம் குறைந்து அந்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்தனர்.
இதனையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு நீக்கியது. அதாவது 2 குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தது. இந்நிலையில் கடந்த 18 மாதங்களில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.