உலகில் பெரும்பாலான நாடுகளில் உள்ள இளைஞர்களின் பெரும் கனவு முன்னணி ஐடி நிறுவனங்களில் வேலைக்குச் சேரவேண்டும் என்பது.
ஆனால், சமூக காலமான உலகளவில் பொருளாதார மந்தநிலை பணவீக்கம் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
இந்தநிலையில், மைக்ரோசாப்ட், கூகுள், ஆல்பா, ஆரக்கில், உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பெருமளவில் வேலை நீக்கம் செய்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 11 ஆயிரம் ஊழியர்களை பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா வேலை நீக்கம் செய்தது.
இதையடுத்து, மேலும், 13 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டன் மெட்டா நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் 4 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
கடந்தாண்டு முதல் சுமார் மெட்டா நிறுவனம் 21,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.