Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

40 கோடியை நெருங்கியது உலக கொரோனா பாதிப்பு!

40 கோடியை நெருங்கியது உலக கொரோனா பாதிப்பு!
, திங்கள், 7 பிப்ரவரி 2022 (07:47 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 40 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 395,881,222 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 5,758,587 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 314,741,594 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 75,381,041 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78,017,402 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 926,029 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 47,998,370 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,536,597 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 632,289 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 22,717,907 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,271,202 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 502,905 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 40,649,159 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை பொது விடுமுறை: அரசு அதிரடி அறிவிப்பு!