Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாலிபரை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த பெண்கள்

Advertiesment
வாலிபரை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த பெண்கள்
, செவ்வாய், 30 மே 2017 (18:36 IST)
தென்னாப்பிரிக்காவில் 23 வயது இளைஞர் ஒருவரை 3 பெண்கள் கடத்திச் சென்று பலாத்கரம் செய்த சம்பவம் உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தென்னாப்பிரிக்கா பிரிட்டோரியா நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 23 வயது இளைஞர் ஒருவர் டாக்சியில் பயணம் செய்துள்ளார். அவருடன் மூன்று பெண்களும் பயணம் செய்துள்ளனர். அப்போது அந்த பெண்கள் அவருக்கு மயக்க ஊசி போட்டு மயக்கமடைய செய்துள்ளனர். பின் யாருமில்லாத இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர். 
 
அவருக்கு மயக்கம் தெளிந்த பின் ஏதோ ஒரு அறையில் வைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்துள்ளார். ஆனால் அவரால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த பெண்கள் அவருக்கு எனர்ஜி ட்ரிங்க் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மூன்று நாட்களுக்கு பிறகு அந்த இளைஞரை அரை நிர்வாணமாக சாலை ஓரத்தில் வீசியுள்ளனர்.
 
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலின பாகுபாடு இல்லாமல் அந்த பெண்களை கைது செய்வோம் என்று தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில் 21% ஆண்கள். இச்சம்பவம் அந்நாடு மட்டுமின்றி உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விழா நடத்திய மாணவர் மீது தாக்குதல்...