Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எகிறும் ஒமிக்ரான் பாதிப்பு; 11,500 விமானங்கள் ரத்து! – பயணிகள் தவிப்பு!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (11:14 IST)
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பால் கடந்த மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஒமிக்ரானால் விமான நிறுவனங்கள் மீண்டும் நஷ்டத்தை சந்திக்க தொடங்கியுள்ளன. பல நாடுகளில் ஏற்கனவே சில நாடுகளில் இருந்து விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் விமான சேவைகளும் ஒமிக்ரான் பாதிப்பால் ரத்தாகி வருகின்றன. கிறிஸ்துமஸ் மற்றும் அதற்கு முதல் நாள் என கடந்த மூன்று நாட்களுக்குள் உலகம் முழுவதும் 6 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் தற்போது வரை உலகம் முழுவதிலும் 11,500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் விமான ஊழியர்களுக்கு ஒமிக்ரான் உறுதியானதால் 200க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை சீனா மற்றும் அமெரிக்கா சார்ந்த விமான நிறுவனங்களுடையவை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments