Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடலுக்கடியில் பிரம்மாண்ட நகரங்கள்: விலகியது மர்மத்தின் கேள்விகள்!!

கடலுக்கடியில் பிரம்மாண்ட நகரங்கள்: விலகியது மர்மத்தின் கேள்விகள்!!
, புதன், 24 மே 2017 (11:41 IST)
கடலுக்கடியில் பல நகரங்கள் முழ்கி போய் உள்ளன. சமீபத்தில் கடலுக்கு அடியில் உள்ள மூன்று நகரங்கள் கண்டிபிடிக்கப்பட்டது. அதனை பற்றி காண்போம்...


 
 
தி ப்ரமிட்ஸ் ஆப் யோனாகுனி [Yonaguni Pyramid]:
 
ஜப்பானை சேர்ந்த யோனாகுனி என்ற கடல் பகுதியில் சுமார் 76 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட பிரமாண்ட பிரமிடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

webdunia

 

 
1987 ஆம் ஆண்டு இந்த கடல் பகுதியில் சில அறிய வகை சுறா மீன்களை பற்றிய ஆராய்ச்சியில் இருக்கும் பொழுது இந்த மாபெரும் பிரமிடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இந்த பிரமிடுகள் சுமார் 10000 ஆண்டுகள் பழமையானது என தெரிகிறது.
 
கிளியோபாட்ரா அரண்மனை [Cleopatra Palace]:
 
எகிப்து நாட்டில் கடலுக்கு அடியில் 1,600 ஆண்டுகளுக்கு முன் புதையுண்டதாக கருதப்பட்ட கிளியோபாட்ரா அரண்மனை கடலுக்குள் கண்டுப்பிடிக்கப்பட்டது.

webdunia

 

 
பலவித சிலைகளும், சிவப்பு கிரானைட் தூண்களும், அரிய பொருட்களும் இங்கு கண்டெடுக்கப்பட்டது. இங்கு புதையல்களும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
 
கிளியோபாட்ராவின் மகனின் சிலையும், கடவுள்களின் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டது.
 
போர்ட் ராயல் [Port Royal]:
 
கிபி 1518 நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட போர்ட் ராயல் நகரம், முற்காலத்தில் ஜமைக்காவில் உள்ள கரிபியன் கடல் பகுதியில் செயல்பட்டு வந்தது. 

webdunia

 

 
கடல் கொள்ளை, சாராயம், விபச்சாரம் என அனைத்து கொடுமைகளுக்கும் பெயர் பெற்றது இந்த நகரம். ஜமைக்காவின் முக்கியமான நகரமான இது தற்போது 40 அடி ஆழத்தில் கடலுக்குள் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமித்ஷாவை கலாய்க்கும் சீமான்: கதவ மூடுங்க வேற யாரவது வந்துட போறங்க!