Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் மூன்று குழந்தை திட்டம் – சட்டமாக இயற்றப்பட்டது

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (14:23 IST)
சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்வதை அனுமதிக்கும் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 
மே மாதம் தம்பதிகள் மூன்று குழந்தைகளை பெற்று கொள்ள அனுமதிக்கவிருப்பதாக தெரிவித்திருந்தது. அந்த முடிவு தற்போது அதிகாரப்பூர்வமாக சட்டமாக மாறியுள்ளது. மேலும் குழந்தை பெற்று கொள்வதை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களையும் சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இதன்மூலம் உள்ளூர் அரசாங்க விதிமுறைகள்படி எத்தனை குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியை தாண்டி குழந்தைகளை பெற்று கொள்ளும் பெற்றோர் அபராதம் வழங்க தேவையில்லை. மேலும் குழந்தைகளை கவனித்து கொள்வதற்கென விடுமுறை, மேம்படுத்தப்பட்ட குழந்தை நல கட்டமைப்பு ஆகியவற்றிலும் சீனா கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சீனாவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் அங்கு பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2016ஆம் ஆண்டு சீனா தனது ஒரு குழந்தை திட்ட்த்தை ரத்து செய்த்து இருப்பினும் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. நகரங்களில் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments