Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூடானில் மீட்கப்பட்ட 275 பேர் தமிழ் நாட்டிற்கு வருகை - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

Advertiesment
gingee masthan
, சனி, 20 மே 2023 (21:10 IST)
சூடானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ந்தது. எனவே ராணுவத் தளபதிகளாக  இறையாண்மை அமைப்பு என்ற பெயரில் ஆட்சி  நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ராணுவ ஆட்சியில் இருந்து மீண்டும் ஜனநாயக ஆட்சிக்கு திரும்ப வேண்டுமென்ற முன்மொழிவின்படி, ராணுவத்துடன், துணை ராணுவப்படையை இணைப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதில் இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளதால்,  தினமும் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சூடானில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் இருந்த   நிலையில் அவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள்  ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில்,   ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தின் மூலமக மத்திய அரசு மற்றும் தமிழ அரசுகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி,  நேற்றிரவு 10:30 மணியளவில், சூடான் நாட்டிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 10 பேர் டெல்லியில் இருந்து  விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபற்றி அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சூடானில் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள தமிழகர்களை தாயகம் மீட்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 275 பேரை மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு மீட்டு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரவிந்த் கெஜ்ரிவாலின் விமர்சனம் ஏற்கத்தக்கது அல்ல - நடிகை குஷ்பு