மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.
புதுமையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி" குறித்து இவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
ஜோயல் மோகிர் – தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்தப் பொருளாதார வளர்ச்சிக்கான நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காகவும், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் – பழைய கொள்கைகளை அகற்றி, புதிய கொள்கைகள் மூலம் நீடித்த வளர்ச்சியை அடைவது குறித்த ஆய்வுக்காகவும் பரிசுகளை பெறுகின்றனர்.
இந்த நோபல் பரிசுகள், டைனமைட்டை கண்டுபிடித்த ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும்.