Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

135 ஆண்டு கால பழமை, 2000 டன் எடை: புத்தர் ஆலயத்தை இடமாற்றிய சீனர்கள்!!

135 ஆண்டு கால பழமை, 2000 டன் எடை: புத்தர் ஆலயத்தை இடமாற்றிய சீனர்கள்!!
, திங்கள், 18 செப்டம்பர் 2017 (17:35 IST)
சீனாவில் ஷாங்காய் நகரில் உள்ள யுஃபூ புத்தர் ஆலயம் 1882 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஆலயத்தை தற்போது இடமாற்றியுள்ளனர்.


 
 
சுமார், 135 ஆண்டுகள் பழமையும், 2000 டன் எடையும் உள்ள ஆலயத்தை வேறு இடத்திற்கு நகர்த்தியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த ஆலயத்திற்கு வருடத்திற்கு சுமார் 15 லட்சம் மக்கள் சுற்றுலாப்பயணிகளாக வந்து செல்கின்றனர். இங்கு 3 மிகப்பெரிய புத்தர் சிலைகள் உள்ளன. 
 
இந்நிலையில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஆலயம் இருந்த இடத்திலிருந்து 30.66 மீட்டர் தூரம் நகர்த்தப்பட்டுள்ளது. மேலும், 1.05 மீட்டர் அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
 
இந்த பணிகள் அனைத்தும் 2 வாரங்களுக்குள் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12ம் வகுப்பு மாணவியை சீரழித்த பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்...