நிலாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட உயரமான கோபுரங்கள் குறித்து சர்ச்சை வெடித்துள்ளது.
வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஒரு குழு, சமீபத்தில் நிலவின் விளிம்பு பகுதியை ஆராய்ந்தது. அப்போது அங்கு 200 அடி உயர ஐந்து கோபுரங்கள் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். இதுபோன்ற கோபுரங்களை திடீரென்று உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், நிலாவில் வேற்று கிரகவாசிகள் வசிக்கலாம் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இதற்கு முன் நாசா வெளியிட்ட புகைப்படங்கள் அளவுக்கு, இந்த புகைப்படங்கள் தெளிவாக இல்லையென்றாலும், கோபுரம் இருப்பது தெளிவாக தெரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இதுபோன்ற தகவல்களை வெளிவராமல் மேலை நாடுகள் தடுப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.