Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலி- அமெரிக்கா தகவல்

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (22:17 IST)
ரஷியா நாடு  உக்ரைன் மீது கடந்தாண்டு போரிட்டது. இப்போரிற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும், ரஷியா அதைப் பொருட்படுத்தவில்லை.

எனவே, உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளும் நேட்டோ கூட்டமைப்புகளும் நிதியுதவி மற்றும் ஆயுதவுதவி செய்து வருகின்றன.

இதனால், உக்ரைன், ரஷியாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில்,கடந்தாண்டு டிசம்பர் முதல் தற்போது வரை உக்ரைன் போரில் சுமார் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

மேலும், 80 பேர் இப்போரில் காயமடைந்துள்ளதாகக் கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளளர் ஜான் ஜெர்பி, ‘’கடந்த 5 மாதத்தில் ரஷிய வீரர்கள் 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்பது எங்கள் கணிப்பு. ரஷியாவினால் முக்கியத்துமுள்ள எந்த இடத்தையும் கைப்பற்றமுடியவில்லை’’ என்று கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இந்தி பெயர் அழிப்பு.. திமுகவினர் போராட்டம்..!

மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை.. திமுக தான் அரசியல் செய்கிறது: டிடிவி தினகரன்

விஜய் எனது நண்பர்.. தேர்தல் நேரத்தில் கூட்டணி..? - புதுச்சேரி முதல்வர் கொடுத்த அப்டேட்!

தெலுங்கானா சுரங்கத்திற்குள் சிக்கிய 8 பேர் நிலை என்ன? மீட்பு பணிகள் தீவிரம்

100 சவரன் நகைகள் கொள்ளை.. பெண்களுடன் உல்லாச வாழ்க்கை! - அதிர்ச்சியளிக்கும் ஞானசேகரன் வாக்குமூலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments