ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2 ஜெட் விமானங்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஒரே ஓடு பாதையில், பாங்காக் நோக்கிச் சென்ற தாய் ஏர்வேஸ் இண்டர் நேசனல் விமானமும், சீன தைபேசுக்கு புறப்பட்ட இ.வி.ஏ ஏர்வேஸ் விமானமும் எதிர்பாரா விதமாக உரசி கொண்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள காணொலியில், ஏர்வேஸ் விமான இறக்கையின் ஒரு பகுதி உடைந்திருப்பதும், உடைந்த இறக்கையின் சில பகுதிகள் போன்றிருக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.
இந்த விமான விபத்திற்கான காரணம் இதுவரை கூறவில்லை. இதுபற்றி ஜப்பான் போக்குரவத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.